வீரவநல்லூர்- முக்கூடல் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து சிலர் பழைய துணிகள், மாலைகள் மற்றும் கட்டிட கழிவுகள் போன்றவற்றை ஆற்றில் வீசி செல்கின்றனர். இதனால் ஆறு மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.