மருத்துவ கழிவுகளால் ஆபத்து
வடுகன் பற்றிலிருந்து பொற்றையடி செல்லும் நான்கு வழிச்சாலையோரத்தில் தேவகுளம் உள்ளது. இந்த குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும் இரவிலேயே இந்த கழிவுகள் தீவைத்து எரிக்கப்படுவதால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ்,