பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் சுகாதார வளாக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளதால், இதை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சுகாதார வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைக்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.