திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் அரும்பட்டு ஊராட்சி் அத்திப்பட்டு அருகே ராகவன் வாய்க்காலில் தரைபாலம் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள தரைப்பாலம் கட்டும் பணியை தொடங்கி, விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.