விக்கிரவாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பயிர்களை விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் சிரமப்படுகின்றனர். விக்கிரவாண்டியில் உழவர்சந்தை அமைந்தால் தோட்ட பயிர்களை விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.