பண்ருட்டி தாலுகா அன்னை இந்திராகாந்தி சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாயின் மேற்பகுதியில் சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகலான நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விழுந்து படுகாயமடைந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதை தவிா்க்க குறுகலான பாலத்தை, விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.