நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மெட்டாலா தற்போது காய்கறி விற்பனையில் முக்கிய இடமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் மெட்டாலா, கார்கூடல்பட்டி, உரம்பு, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மூலக்குறிச்சி, நடுக்கோம்பை, திம்மநாயக்கன்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம் உள்பட பல கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்து மெட்டாலாவில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டால் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் அடைவர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உழவர் சந்தை அமைக்கப்படுமா?
-கருப்பண்ணன், ராசிபுரம், நாமக்கல்.