நிழற்கூடம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-18 18:15 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும்போது மலைப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சீதோஷ்ண நிலை காணப்படும். மேலும் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே ஒதுங்க இடம் இல்லாமல் மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே 70 கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் நின்று செல்லும் வகையில் ஆங்காங்கே நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும்.

-சமூக ஆர்வலர்கள், கொல்லிமலை.

மேலும் செய்திகள்