சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் நீர் இருப்பு குறைந்து விடுகிறது.. மேலும் கண்மாயை நம்பி உள்ள விவசாயம் போன்ற தொழில் வளங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.