வரி வசூலுக்கு ரசீது

Update: 2022-07-18 18:10 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்டில் காய்கறி கடை போடுவதற்கு தனியார் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து வரி வசூல் செய்து வருகின்றது. ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவது இல்லை. இதனால் சிறு விவசாயிகள் இந்த முறையற்ற வரி வசூலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வரி வசூல் செய்வதற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்.

-கவுதம், வெண்ணந்தூர். 

மேலும் செய்திகள்