பெங்களூரு கனகபுரா ரோட்டில் சாலையின் குறுக்கே ஏராளமான மாடுகள் அங்கும், இங்கும் வலம் வருகின்றன. மேலும் சில சமயங்களில் மாடுகள் நடுரோட்டில் படுத்து கொள்கின்றன. வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தாலும் மாடுகள் எழுந்து செல்வது இல்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மாடுகள் சாலையின் குறுக்கே வரும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளது. இதனால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.