ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2023-01-08 14:27 GMT
பெங்களூருவுக்கு ஏரிகளின் நகரம் என்றும் பெயர் உண்டு. ஆனால் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு உதாரணமாக கே.ஆர்.புரம் அரசு கல்லூரி அருகே உள்ள ஏரியை கூறலாம். அந்த ஏரியை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஏரியை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. மேலும் ஏரியில் கழிவுநீரும் கலப்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. அந்த ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்