புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி மனைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கொசு தொல்லையை தடுக்க புகை மருந்து தெளிக்கவேண்டும்.