கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் புகழூர் வாய்க்கால் கரை ஓரத்தில் போடப்பட்டிருந்த சாலை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர். இந்நிலையில் வாய்க்கால் கரை சாலையில் நெடுகிலும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேமங்கியில் இருந்து முத்தனூர் வரை வாய்க்கால் கரை ஓரத்தில் போடப்பட்டிருந்த சாலையை சீரமைத்து நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.