தர்மபுரி மாவட்டம் மோட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு, பெத்தானூர், மோட்டாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க நத்தமேட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் என பலரும் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ராம், மோட்டாங்குறிச்சி, தர்மபுரி.