தா்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி அவ்வைவழி சந்திப்பு சாலை பகுதியில் உள்ள மின்கம்பத்தை சுற்றி, இரும்பு தகடுகள் மூலம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடை வைத்துள்ளவருக்கும், கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை ஆக்கிரமிப்பு செய்து இரும்பு தகரங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாலா, எ,ஜெட்டிஅள்ளி, தர்மபுரி.