நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினசரி சென்று வருகின்றனர். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் எந்த பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் எந்த விதமான அறிவிப்பு பலகையும் இல்லை. எனவே பயணிகள் திணறி வருகின்றனர். எனவே எந்த பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் தகவல் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.