நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்து கிருஷ்ணன்புதூரில் நாற்கர சாைலயோரம் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடங்கப்பட்டு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாகவும், அங்கு எந்த பஸ்களும் நின்று செல்லவில்லை என்றும், பொன் வசந்த் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு, அங்கு டவுன் பஸ்கள் நின்று செல்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.