வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-18 17:27 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி நீர்த்தேக்க திட்டத்தால் அருகிலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதனால் மானாவாரி பயிர்கள் செய்யும் வயல்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் பாய்ச்சி நல்ல அளவு விவசாயம் செய்ய முடிகிறது. அதே நேரத்தில் சுத்தமல்லி வாய்க்காலில் பிரதான கால்வாய் கார்குடி, இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், சிந்தாமணி, கோடங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டது. சுத்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. நீர்த்தேக்க திட்டத்தின் பிரதான கால்வாய் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கோடங்குடி கிராமத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர்கள் கடை அமைத்துள்ளனர். சிந்தாமணி, தா.பழூர் ஆகிய பகுதிகளிலும் வாய்க்காலை முற்றிலும் ஆக்கிரமித்து விட்டனர். இதனால் இந்த பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு மிக நீண்ட ஆண்டுகள் ஆகிறது. உரிய அதிகாரிகள் பிரதான வாய்க்காலில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கொடுப்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்