பார்வதிபுரத்தில் இருந்து கணியாகுளம் செல்லும் பாதையில் நாற்கரசாலையின் கிழக்கு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிலர் மாட்டு கழிவை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண்ரோஸ், பார்வதிபுரம்.