அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் பகுதியில் உள்ள ஆவேரி, நகரத்தின் மையப்பகுதியில் உள்ள உய்யகொண்டான் ஏரி, கொக்கனேரி, தோப்பேரி ஆகிய 5 ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் மழைபெய்யும் போது இந்த ஏரிகளில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.