விபத்துகள் ஏற்படும் அபாயம்

Update: 2023-01-01 16:13 GMT

கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் சுற்றி செல்லாமல் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகில் ஆபத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டி செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் செல்வதையும், சாலையை கடப்பதையும் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்