தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். பயணிகள் மட்டுமின்றி வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான இடவசதி இல்லை. இதன்காரணமாக இருசக்கரவாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?