தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2023-01-01 13:35 GMT

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சி நாகை-திருவாருர் நெடுஞ்சாலையோரத்தில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதன்காரணமாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் வாய்க்காலுக்குள் தவறி விழுந்துவிடுகின்றனர். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்