நெல்லையை அடுத்த பேட்டையில் இருந்து பழைய பேட்டைக்கு செல்லும் இணைப்பு சாலையில் திருப்பணிகரிசல்குளம் விலக்கில் இருந்த வழிகாட்டி பெயர் பலகை சரிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு மீண்டும் வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.