நெல்லை மாவட்டம் முக்கூடல் வம்பளந்தான் முக்கு பகுதியில் சாலையோரம் வாறுகால் உடைந்து, அருகில் உள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்குள் கழிவுநீர் தேங்குவதாக ஆதிமூலம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து சேதமடைந்த வாறுகால் சீரமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.