சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் செல்லும் பிரிவு சாலை உள்ளது. இங்கு தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழுந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பிரிவு சாலை வரை உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.