தர்மபுரி மாவட்டம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பழைய இண்டூர் கிராமத்தில், தமிழ்நாடு கதர் வாரியம் மூலம் பாய் தயாரிக்கும் 2 கட்டிடங்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களில் கோரப் பாய்களை கைகள் மூலம் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இந்த இரு கட்டிடங்களின் தரைகள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டிடங்களை சீரமைக்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், இண்டூர், தர்மபுரி.