பெங்களூரு காடுகோடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு சாக்கடை கால்வாய் திறந்தே கிடக்கிறது. அந்த கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மூக்கை மூடி கொண்டு செல்கின்றனர். அந்த சாக்கடை கால்வாயை மூட பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?