திண்டுக்கல் நகரில், தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமந்தநகர் மேம்பாலம் அருகே வந்த சரக்கு லாரி ஒன்று, சேதமடைந்த தரைப்பாலத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. எனவே நகரில் சேதமடைந்துள்ள தரைப்பாலங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.