ஊர்பெயர் பலகை வேண்டும்

Update: 2022-12-28 10:29 GMT

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதியில் அமைந்துள்ள எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி வழியே செல்லும் வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இங்கு ஊர் பெயர் பலகை இல்லை. பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டியில் பெயர் பலகை வைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்