கழிப்பறை பராமரிக்கப்படுமா?

Update: 2022-12-28 09:40 GMT

சீரநாயக்கன்பாளைனம் மாகாளியம்மன் கோவில் அருகே பொது கழிப்பறை ஒன்று உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு சென்று வரவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்