பராமரிப்பு இல்லாத அரசு அலுவலகம்

Update: 2022-12-25 16:30 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைய தொடங்கி உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுவர்களின் சில இடங்கள் பெயர்ந்து கீழே விழுகிறது. எனவே பழுதடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முறையாக பராமரித்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்திபன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்