ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பின்புறம் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுபடுவதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.