குடிநீர் வாரியம் தோண்டிய பள்ளத்தால் அவதி

Update: 2022-12-25 15:27 GMT
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை 3-வது கிராஸ் பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்கள் ஆகியும் அந்த பணிகள் நிறைவடையாமல், பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் அந்த பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்