பெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை அருகே உள்ள சாலையில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை அப்பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அதன் அருகே பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவர்கள் சாலையில் இறங்காமல் செல்வதற்கு பாதுகாப்பாக அந்த நடைபாதை இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நடைபாதையில் உள்ள சிலாப்புகள், கற்கள் பெயர்ந்தன. தற்போது அந்த நடைபாதை மோசமான நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.