பெங்களூரு ராஜாஜிநகர் 4-வது பிளாக் பகுதியில் மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலம் அருகே உள்ள சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த சாலை பெயர்ந்தும், ஆங்காங்கே ஜல்லி கற்கள் சிதறியும் கிடக்கின்றன. அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.