ஆபத்தான சாலை பள்ளம்

Update: 2022-12-25 15:26 GMT
பெங்களூரு ஆயில் மில் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் முன்பு உள்ள சாலையில் நடுவே பள்ளங்கள் உள்ளன. அந்த பள்ளத்தில் வாகனங்கள் இறங்கி ஏறும்போது போது வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர். அந்த பள்ளத்தால் இதுவரை 5 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்