பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆய்க்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆய்க்குடி-அசூர் செல்லும் சாலையின் சுடுகாடு உள்ளது. மேலும் அதனருகே பெரிய ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சுடுகாட்டில் உடலை தகனம் செய்ய முடியாமல் சாலையோரத்தில் வைத்து உடலை எரியூட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலத்திலும் இந்த சுடுகாட்டை பயன்படுத்தும் வகையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உயரத்தை அதிகப்படுத்தி சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.