அரியலூர் மாவட்டம், குறிச்சி நத்தம் தென்புற பகுதியில் அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் பழமையான பட்டு போன புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த மரம் காற்றில் பயங்கரமாக ஆடி வருகிறது. இந்த முறிந்து ஏதாவது வாகனங்களில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பட்டுபோன புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.