தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-12-25 10:55 GMT

தஞ்சையை அடுத்த வாண்டையார்யிருப்பு பகுதி வடக்குவாண்டையார்யிருப்பில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும், கால்நடை கழிவுகளும் கழிவுநீருடன் கலந்து குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்கவும், கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்