நாங்குநேரி தாலுகா கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு செல்லும் வழியில் முருகன்குடியிருப்புக்கு வடபுறம் உள்ள பாலத்தின் நடுவில் பெரிய துவாரம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே துவாரத்தை உடனடியாக அடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.