கொசுமருந்து அடிக்கப்படுமா?
நாகை மாவட்டம் நாகை நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக வெளிப்பாளையம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், காடம் பாடி, அக்கறைப்பேட்டை உள்பட பல் வேறு பகுதிகளில் இரவில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உ்ரிய நடவடிக்கை எடுத்து நாகை நகரில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள, வெளிப்பாளையம்.