அம்பை தாலுகா அயன்திருவாலீஸ்வரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகத்தை சூழ்ந்து புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்துவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.