பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்

Update: 2022-12-25 10:24 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஞ்சாயத்து அத்தைகொண்டான் கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஓடை பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்