கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதை முறையாக அகற்றுவது இல்லை. மேலும் அங்குள்ள பால விநாயகர் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.