தியாகதுருகம் அருகே தியாகை தெற்கு தெருவில் மினிகுடிநீர் தொட்டி செயல்பாடின்றி காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகவே தியாகை பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.