தவளக்குப்பம் நல்லவாடு ரோட்டில் உள்ள மூகாம்பிகை நகர் நுழைவாயில் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு மோசமான நிலையில் உள்ளது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி முழுவதும் சிதறி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் அபாயம் உள்ளது.