நாகை மாவட்டம் திருமருகல் அருகே தொகுப்பு வீடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது.மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைத்தண்ணீர் வீடுகளுக்குள் ஒழுகி வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்.