சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் விவசாயிகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள்அதிகமாக வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது தேவையற்ற பொருட்களை உள்ளே போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த சமுதாயநலக்கூடம் பயன்படாமல் மூடியே கிடைக்கிறது. அதனை சுற்றிலும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து, பயன்படாத பொருட்கள் அதன் அருகில் போடப்பட்டு மூடிக் கிடக்கின்றன. எனவே சமுதாய நலக்கூட கட்டிடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, தலைவாசல்